முகப்பு

வணக்கம்!

அறிவியல், கலை, சட்டம், மருத்துவம், வணிகம், வாழ்வியல் போன்ற துறைகளில் உள்ள அறிவைத் தமிழில் பதிவுசெய்யும் தளம் 'அறி'. மாதந்தோறும் வெவ்வேறு தலைப்புகளில் நிகழும் அறிஞர்களின் உரைகள் காணொளியாகவும், பல்வேறு துறை சார்ந்த வல்லுநர்களின் கட்டுரைகளும் இந்தத் தளத்தில் கிடைக்கும். இந்தத் தளத்தில் உங்கள் கட்டுரைகள் இடம்பெற நினைத்தால், 'கட்டுரை அழைப்பு' என்ற பகுதியில் அதற்கான விவரங்களைப் பெறலாம்.

அறிவால் இணைவோம்.
அறிவால் உயர்வோம்.

அன்புடன்
அறி குழு

aRi Talks Poster

Supernova என்பது விண்மீன் வெடித்துச் சிதறும் நிகழ்ச்சி. விண்மீன்களில் சில எப்போதாவது சிதறி அழியும். மிகச் சக்தி வாய்ந்த இவ்வகைச் சிதறுமீன்களால் வானமே ஒளி வெள்ளமாகும், அவை இரவைப் பகலாக்கும், சிதறியபின் அம்மீன்கள் நண்பகலிலும் காணத் தெரியும்.

மீன்கொடிப் பாண்டியர்களை வென்றும், கங்கைகொண்டும், கடாரம் வென்றும், பெருங்கோயில்களைக் கட்டியும் அரசாட்சியின் உச்சத்தில் இருந்த சோழர்கள் காலத்திற்குள் மூன்று சிதறுமீன்கள் தோன்றி மறைந்துள்ளன.

சோழர்கள் அவற்றைக் கண்டார்களா? எங்காவது கல்வெட்டுக்களில், ஏதாவது செப்பேடுகளில் எழுதி வைத்துள்ளார்களா? சோழர் காலத்தில் சிதறிய மீன்களைப் பற்றி உரையில் காண்போம்.

×

Disclaimer

All proceeds from the course will go towards our language research and language literacy projects.